இந்திய மண்ணில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்த தென்ஆப்பிரிக்கா அணி!
INDvsSA first Test match between South Africa
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், இன்று (3-ஆம் நாள்) தேநீர் இடைவேளைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
முதல் இன்னிங்ஸ்: தென்ஆப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்தியா 189 ரன்கள் சேர்த்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ்: தென்ஆப்பிரிக்கா 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியாவுக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த எளிய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், தென்ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
English Summary
INDvsSA first Test match between South Africa