மதுரையை உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துட்டாங்களா? என்ன மாதிரியான அரசியல் இது? உச்சகட்ட கொந்தளிப்பில் அதிமுக!
ADMK Condemn to DMK MK Stalin Govt Madurai Moorthy
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "மதுரை தபால் தந்தி நகரில் ஞாயிறுதோறும் நடக்கும் சாலையோர வாரச் சந்தைக்கு திமுக அரசின் மதுரை மாநகராட்சி திடீரென தடை விதித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதனால் ஏழை எளிய வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விடியா திமுக அமைச்சர் மூர்த்தியின் தூண்டுதலில் தான் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கவலையோடு தெரிவிக்கின்றனர்.
மூர்த்தி அவர்களே, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் தானே? மக்களுக்கு பணியாற்ற தானே இருக்கிறீர்கள்?
மதுரை மாநகரை உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்தது போல, போராடும் மக்களைத் தடுக்க கார், டிராக்டர்களை குறுக்கே விடுவது என்ன மாதிரியான அரசியல்?
இதே மக்களிடம் தானே நீங்கள் இன்னும் 4 மாதத்தில் வாக்கு கேட்க போவீர்கள்? என்ன சொல்லி வாக்கு கேட்பீர்கள்- உங்களை கடை வைக்க விடாமல் உங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அதற்காக போராட வந்த உங்களையும் அராஜகம் செய்து தடுக்க முயன்றதற்கு வாக்களியுங்கள் என்று சொல்வீர்களா என்ன?
குறுநில மன்னராட்சி போல பாவித்துக் கொண்டு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கும், அதன் அமைச்சருக்கும் கடும் கண்டனம்.
வாரச் சந்தைக்கான அனுமதி வழங்காமல் திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்தால், வியாபாரிகளோடு இணைந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Govt Madurai Moorthy