ராஜஸ்தானில் சோகம்: லாரி மீது வேன் மோதி விபத்து; 06 யாத்ரிகீர்கள் பரிதாப பலி; 14 பேர் காயம்..!
6 people tragically died in a van lorry accident in Rajasthan
ராஜஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லாரி மீது மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் தன்சுரா பகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் 20 பேர் ஏற்றிச்சென்ற வேன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்-பலேசர் தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 03 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குறித்த விபத்தின் போது வேன் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதோடு, லாரியின் முன்பகுதி மோதியதில் நொறுங்கியுள்ளது. லாரியும் நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், அதில் இருந்த மூட்டைகள் சாலையெங்கும் சிதறிக்கிடந்தன. குறித்த விபத்து இன்று அதிகாலையில் மீட்பு பணிகள் தாமதமாக நடந்துள்ளது.
English Summary
6 people tragically died in a van lorry accident in Rajasthan