இந்துக்கள் கடைகளில் மட்டும் பொருள் வாங்குங்கள் - மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே, “கடைகளில் பொருள் வாங்கும் முன் கடைக்காரரின் மதத்தை கேட்டறிந்து, அனுமன் சலிசா கூறச் சொல்லுங்கள்” என அறிவுறுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில், பயணிகளிடம் மதம் கேட்டுத் தெரிந்துகொண்டு, இஸ்லாமிய நம்பிக்கையின் ‘கல்மா’ சொல்வதை வலியுறுத்தி பயமுறுத்திய சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில், ரத்னகிரி மாவட்டம் தபோலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதேஷ் ரானே, “தீவிரவாதிகள் போலவே, நாம் கடைகளில் பொருள் வாங்கும் முன் கடைக்காரரிடம் மதத்தை கேட்க வேண்டும். அவர்கள் ‘இந்து’ என்று கூறினாலும், நிச்சயமாக சோதிக்க வேண்டும். அவர்களிடம் அனுமன் சலிசா கூறச் சொல்லுங்கள். தெரியவில்லை என்றால், அவர்களிடம் பொருள் வாங்க வேண்டாம்” என்றார்.

மேலும் அவர், “அவுரங்கசீப் தன் தந்தை, சகோதரனை கூட மதிக்கவில்லை. அவர்கள் இவ்வளவு இறக்கமற்றவர்கள் என்றால், நம்மை எப்படிச் செமையாக மதிப்பார்கள்? நம் பணம் இவர்களிடம் கொடுத்து அவர்களை வளப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, கடைபோக்காக இந்து கடைகளிலிருந்து மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pahalgam attack Maharashtra BJP minister controversy speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->