பாகிஸ்தானை இன்னும் அடித்து நொறுக்கி இருக்க வேண்டும் - ஆதங்கப்படும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி!
Operation Sindoor Subramanian Swamy BJP MP Pakistan
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இதற்கு கடுமையான பதிலடியாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் துரிதத் தாக்குதலை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தரைமட்டமாக்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.
இதைத் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பாகிஸ்தான் இவ்வாறு ஒரு கடுமையான தாக்குதலை மேற்கொண்டு நேரடியான மோதலைத் தொடங்கியுள்ளது எனக் குற்றம் சாட்டினார். பஹல்காம் சம்பவம், நம்முடைய நாகரீக வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பதிலடி முக்கியமானது என்றாலும், "ஆபரேஷன் சிந்தூர்" இன்னும் அதிகம் தீவிரமாக நடைபெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானை இன்னும் அடித்து நொறுக்கி இருக்க வேண்டும், பாகிஸ்தானை முழுமையாக அடிக்க வேண்டிய நேரம் இது எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை உலக நாடுகளிடம் விளக்க, பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், இவர்கள் அரசுச் செலவில் சுற்றுலாவாக பயணிக்கிறார்கள் என்பது நன்கு அறியப்பட்ட விஷயமே எனவும் சுப்பிரமணியன் சுவாமி சாடினார்.
English Summary
Operation Sindoor Subramanian Swamy BJP MP Pakistan