நடுவானில் வந்த அலார ஒலி.. ஏர் இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கம் - நடந்தது என்ன?
air india flight emergency landing in delhi airport
நாட்டின் தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்கம் உள்ள என்ஜினில் தீ பற்றும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து விமானி அறையில் அலாரம் ஒலித்தது. இதையடுத்து விமானி டெல்லி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதை கேட்டு அதிகாரிகளும் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்துள்ளனர். அதன் படி விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.
அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்த விபத்தால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு, செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று ஏர் இந்தியா விமான நிறுவனமும் வருத்தம் தெரிவித்துள்ளது.
English Summary
air india flight emergency landing in delhi airport