இணையவழி காரில் பயணம்... பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற ஓட்டுநர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், அரும்பாக்கம் செல்வதற்காக நேற்று முன்தினம் இணையவழி செயலி மூலம் காரை முன்பதிவு செய்துள்ளார்.இதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்த கார் ஓட்டுநருடன் இளம்பெண் காரில் புறப்பட்டுள்ளார்.

ஆனால், அரும்பாக்கம் நோக்கி செல்ல வேண்டிய கார் திடீரென வேறு பாதையில் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்றபோது ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார்.

பின்னர் இளம்பெண்ணை மிரட்டி, அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறித்ததாகவும், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக சத்தமிட்டு உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து ஓட்டுநர் அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு, அங்கிருந்து காரை ஓட்டிச் சென்று தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனது நண்பரை தொடர்பு கொண்டு அவருடைய உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வானகரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காரின் விவரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோபிநாத் (21) என்பவர் சிக்கினார்.இதையடுத்து கோபிநாத்தை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online car travel Driver arrested trying molest female passenger


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->