பெங்களூர் விமான நிலையத்தில் 1½ கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பெங்களூர் விமான நிலையத்தில் 1½ கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹள்ளி பகுதியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏரளாமானோர் தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பெங்களூருவுக்கு பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர். 

அப்போது சந்தேகப்படும் படி இருந்த ஒரு பயணியை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பாங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, திரும்பி வரும்போது தங்கத்தை கடத்தியதும் தெரிய வந்தது. 

அவரிடம் இருந்து 619 கிராம் தங்கச்சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மலேசியாவில் இருந்து வந்த விமான பயணிகளையும் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்ததில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணியை தனியாக அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அவர்களிடம் இருந்து 1¼ கிலோ எடை கொண்ட தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one crores worthable gold seized in banglore airport


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->