பாஜகவின் தேசிய தலைவரான முதல்நாளே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமரித்துள்ள நிதின் நபின்..!
On his very first day as BJP's national president Nitin Nabin has criticized the opposition parties regarding the Thiruparankundram issue
பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக நிதின் நபின் இன்று பதவியேற்றுக் கொண்டார். 45 வயதான நிதின் நபின, பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர், சமீபத்தில், எதிர்க்கட்சிகளால் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்யவும் எப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் பார்த்தோம் என்றும், சோம்நாத் பற்றி நாம் பேசும் போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நமது பாரம்பரியங்களைத் தடுக்கவும், ராமர் சேதுவின் இருப்பை மறுக்கவும், கார்த்திகை தீபத்தை எதிர்க்கவும் முயலும் இத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
English Summary
On his very first day as BJP's national president Nitin Nabin has criticized the opposition parties regarding the Thiruparankundram issue