இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்.! மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்ரிக்காவில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.  

இந்த வைரஸ் ஸ்பைக் புரோட்டினில் 32 வகைகளில் உருமாற்றம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ ஆகிய நாடுகளில் 300 மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், உலக நாடுகள் விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளன.

இதேபோல், நம் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதல் முறையாக உறுதியாகியுள்ளது. 

வெளிநாடுகளில் மட்டும் இந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போதைய இந்தியாவிற்குள் இந்த வைரஸ் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு வந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

omicron virus update in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->