16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! வீடியோ எடுத்த மகன்..! சிக்கிய 65 வயது முதியவர்...! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் 65 வயது முதியவர். இவர் தனது 40 வயது மகன் மற்றும் மருமகள், பேர குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை முதியவரின் மகன் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் முதியவருக்கும், அவரது மகனுக்கும் ஏற்கனவே மோதல் இருந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மகன் இந்த வீடியோவை சிறுமியின் தந்தையிடம் காண்பித்துள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man arrested for raping a 16 year old girl in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->