மனைவியுடன் குத்தாட்டம் போட்ட அதிகாரி...! சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பரபரப்பு!
Officer who DANCE with his wife Suspended causing stir
பஞ்சாப் கல்வித்துறை அதிகாரி தனது அலுவலகத்தில் மனைவியுடன் ஜாலியாக நடனமாடிய வீடியோ தர்பூது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கல்வித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த ''தேவி பிரசாத்'' என்பவர் மனைவியுடன் தனது அலுவலகத்தில் குதுகளமாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை அவருடைய மனைவி யூடியூபில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து மேலதிகாரிகள் கல்வித்துறை அதிகாரி 'தேவி பிரசாத்' அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
தேவி பிரசாத்:
இந்த விவகாரம் குறித்து தேவி பிரசாத் தெரிவித்ததாவது, "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். இது வெறும் ஒரு நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Officer who DANCE with his wife Suspended causing stir