கள்ளக்காதல் விவகாரம்: இரு ஆண், ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து உதைத்த கிராம மக்கள்!
Odisha illegal affair case
ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தின் ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சந்தை வேலை முடிந்து கிராமத்திற்கு திரும்பியபோது, அந்த பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்தனர். அப்போது பெண்ணுக்கும் ஆண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டி வாக்குவாதம் எழுந்தது.
இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி, அந்த பெண்ணையும் இரண்டு ஆண்களையும் மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து, தாக்கப்பட்ட மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருடன் நெருங்கிய உறவு கொண்டவர், குடும்பத்தில் சகோதரனைப் போல கருதப்படும் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில உறவினர்கள், குறிப்பாக பெண்ணின் தந்தை வழி மாமா, கள்ளக்காதல் இருப்பதாகக் கூறி குற்றம்சாட்டியுள்ளனர்.
போலீசார் சம்பவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்த தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Odisha illegal affair case