ஒடிசா | சடலத்தை தின்றால் சக்தி கிடைக்குமா..? அதிரவைக்கும் சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம்: மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்: 

மயூர்பஞ்ச் மாவட்டம், தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (வயது 58) மற்றும் நரேந்திர சிங் (வயது 25) இருவரும் மது அருந்தி போதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலின் சதை பகுதியை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காலை பி.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த மதுஸ்மிதா சிங் (வயது 25) என்ற இளம்பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. 

நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலம் எரிந்த சில நிமிடங்களில் சடலத்தை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களது செயலை பார்த்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்து, மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் காவலருக்கு தகவல் கொடுத்ததில் சம்பவ இடத்திற்கு விரைந்த படாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

மேலும் இறந்த இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் சக்தியைத் தரும் என்றும், அதனால் சடலத்தை உட்கொண்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் தெரிவித்தனர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha eating dead body get power shocking event


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->