எத்தனை வருஷம் வாடகைக்கு இருந்ததாலும் வீடு சொந்தமாகாது! வாடகை கட்டணும்.. வீட்டு வாடகைதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம்.. முக்கிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


வாடகை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வாடகை செலுத்தாமல் இருப்பது சட்டபூர்வமல்ல என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. “மேல்முறையீடு செய்வது, உத்தரவின் செயல்பாட்டை நிறுத்தாது; தடை உத்தரவு இருந்தால் மட்டுமே நிறுத்தும்” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கோவையில் உள்ள ஒரு வணிக கிடங்கின் வாடகைத் தகராறு தொடர்பான இந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் மாதவாடகையை ₹48,000 எனக் கோரிய நிலையில், வாடகைதாரர் ₹33,000 மட்டுமே வழங்கியதாக வழக்கு தொடங்கப்பட்டது. இரு தரப்பையும் கேட்ட வாடகை கட்டுப்பாட்டு அதிகாரி, 2005 பிப்ரவரி முதல் மாதம் ₹2.43 லட்சம் என நியாயமான வாடகையை நிர்ணயித்தார்.

ஆனால் —வாடகைதாரர் உடனே மேல்முறையீடு செய்தாலும், உத்தரவை தடை செய்ய கோரவில்லை.இதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட வாடகையை முழுமையாக செலுத்துவது சட்டப்படி அவசியமாகியது. ஆனாலும் அவர் வருடக்கணக்காக குறைவான தொகையே செலுத்தி வந்துள்ளார்.

பின்னர்:உயர் நீதிமன்றமும் வாடகை உயர்வை உறுதிப்படுத்தியது.உச்ச நீதிமன்றமும் 2012-ல் மனுவை தள்ளுபடி செய்தது
இவ்வளவும் நடந்தும், 2013-க்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ₹1.22 கோடியைத் தாண்டியது.

இதனால், வீட்டு உரிமையாளர் வெளியேற்ற மனுவை தாக்கல் செய்தார். இறுதியில் அது உயர் நீதிமன்றத்தாலும், தற்போது உச்ச நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டது.

நீதிமன்றம் கூறியது:

“வழக்கு நடக்கிறது என்ற காரணத்தால் வாடகை தாமதமாகக்கூடாது.”

“தடை உத்தரவு இல்லையென்றால், நிர்ணயிக்கப்பட்ட வாடகையை கட்ட வேண்டியது கடமை.”

“பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாதது வேண்டுமென்றே செய்த தவறு.”

“வாடகைத் தொகையில் எந்த குழப்பமும் இல்லாதபோது, அதைத் தவிர்க்க வழக்கு காரணம் ஆக முடியாது.”

இதன் மூலம், வழக்கு இருந்தாலும் வாடகை கட்டியே ஆக வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முக்கியமான கொள்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No matter how many years you have been renting you will not own the house Rent payment Supreme Court issues important order to house renters


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->