மும்பையை அதிரவைத்த ₹252 கோடி DRUG வழக்கு! விருந்தில் கலந்த பிரபலங்களின் பெயர்கள் காவலர்கள் விசாரணையில் கசிந்தது...!
252 crore DRUG case that shook Mumbai names celebrities who attended party leaked during police interrogation
மராட்டிய மாநிலம் சாங்கிலியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ₹252 கோடி மதிப்பிலான எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பரபரப்பான வழக்கு மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது.
இந்த சட்டவிரோத கும்பலை இயக்கி வந்த துபாய் தங்கைத்தடத்தில் வசிக்கும் முகமது சலீம், ‘லாவிஷ்’ என்பதன் பெயரில் நிழல் உலகத்தில் செயல்பட்டு வந்தது விசாரணையில் வெளிச்சமிட்டது.சமீபத்தில் அவர் துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டு, மும்பை காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்ந்து நடந்த ஆழமான விசாரணையில் சினிமா,அரசியல்,குற்றம் இணைந்த அதிர்ச்சி தகவல்கள் வெடித்தன.அவருடன் தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் போலீசாரை திகைக்க வைத்தது.
ஒரு பிரபல ஹிந்தி நடிகரும், ஒரு பிரபல வில்லன் நடிகரின் மகனும்,பண சலவை வழக்கில் சிக்கிய நடிகையும் அவரது மகளும்,முன்னணி இயக்குநரும்,பல ராப் பாடகர்களும்,தாதா தாவூத் இப்ராஹிம் கும்பலின் உறுப்பினர்களும்,மும்பையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் முகமது சலீம் சிறப்பு “போதை விருந்துகள்” ஏற்பாடு செய்தது, அதில் பலரும் நேரடியாகக் கலந்து கொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
English Summary
252 crore DRUG case that shook Mumbai names celebrities who attended party leaked during police interrogation