ஏஐக்கு ‘நோ என்ட்ரி’...வழக்கறிஞர் பணி மனிதருக்கே...! - உச்ச நீதிமன்ற நீதிபதி தெளிவான கருத்து!
No Entry AI Practice Law Belongs Humans Supreme Court Justice Expresses Clear View
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான சட்ட மாநாட்டில், நீதித்துறையின் தற்போதைய சவால்களும், எதிர்கால முன்னேற்றங்களும் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய கருத்துகளை பகிர்ந்தனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய விக்ரம் நாத், “செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்த உதவினாலும், அது மனித உணர்வும் சூழ்நிலை மதிப்பீடும் கொண்ட நீதிபதியின் பங்கை ஒருபோதும் மாற்ற முடியாது.

ஒரு வழக்கில் பலர் குற்றச்சாட்டுக்கு உள்ளானால், ஒவ்வொருவரின் சூழ்நிலையை தனித்தனியாக மதிப்பிட்டு தீர்ப்பு வழங்குவது மனிதரால் மட்டுமே சாத்தியம்” என வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பேசிய என். கோடீஸ்வர் சிங், நீதிபதிகளின் பணிச்சுமை குறித்து கவலை வெளியிட்டார். “வழக்கறிஞராக இருந்த காலத்தை விட, நீதிபதியாக பதவியேற்ற பின் மன அழுத்தமும் உடல் நல பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், உஜ்ஜல் புயான் தனது உரையில், “பல மாநிலங்களில் நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதால், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
நீதிபதியின் பணி நேரம் என்பது அலுவலக நேரத்தால் மட்டுப்படுத்தப்படாதது; அது நாள் முழுவதும் தொடர்கிறது” எனத் தெரிவித்து, நீதித்துறையின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார்.
English Summary
No Entry AI Practice Law Belongs Humans Supreme Court Justice Expresses Clear View