“வேலை நேரம் முடிந்ததும் ‘நோ’ கால்ஸ், ‘நோ’ ஈமெயில்! – மக்களவையில் அறிமுகமான ‘Right to Disconnect’ மசோதா!
No calls No emails after work hours Right to Disconnect Bill introduced in Lok Sabha
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் ‘ஹஸ்ல் கலாச்சாரம்’ சாதாரணமாகி விட்ட நிலையில், வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவலக அழைப்புகள், மின்னஞ்சல்கள், மெசேஜ்கள் தொடர்ந்து ஊழியர்களை துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேலை–வாழ்க்கை சமநிலையை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மக்களவையில் முக்கியமான ‘Right to Disconnect’ மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் — வேலை நேரம் முடிந்த பிறகு, ஊழியர்கள் அலுவலகம் தொடர்பான எந்தவொரு அழைப்பிற்கும் அல்லது மின்னஞ்சலுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை சட்ட ரீதியாக உறுதிப்படுத்துவது.
அதாவது, வேலை நேரம் முடிந்ததும் ஒவ்வொரு ஊழியருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது காப்புரிமை என இந்த மசோதா அறிவிக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான “டிஜிட்டல் பர்ன்அவுட்” (Digital Burnout) என்ற மனச்சோர்வு நிலையை இந்த மசோதா முதன்முறையாக கொள்கை ரீதியாக அங்கீகரிக்கிறது. ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் விதமாக, ஆலோசனை மையங்கள் மற்றும் டிஜிட்டல் டிடாக்ஸ் வசதிகளை நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.
மேலும்,வேலை நேரத்திற்குப் பிறகு ஊழியரை பணியில் ஈடுபடுத்தினால் ஒவர்டைம் ஊதியம் கட்டாயம்,ஊழியர்களுடன் கலந்தாலோசித்து நிறுவனம் தெளிவான தகவல் தொடர்பு விதிமுறைகள் அமைக்க வேண்டும்,அவசர காலங்களில் மட்டுமே விதிவிலக்கு வழங்கப்படும்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டில் பணியாளர்களின் Work-Life Balance குறிப்பிடத்தக்க முறையில் மேம்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சம்பளமில்லா கூடுதல் உழைப்பு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த மசோதா,
முதலாளியை கட்டுப்படுத்துவது அல்ல; ஊழியரின் சுதந்திரத்தையும் மனநலத்தையும் காப்பது தான் இதன் நோக்கம்
என்று கூறப்படுகிறது.
வேலை நேரம் முடிந்ததும் ‘ஆஃப்’ சொல்லும் உரிமையை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தும் இந்த முயற்சி, இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
No calls No emails after work hours Right to Disconnect Bill introduced in Lok Sabha