பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா நோய்த்தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், பஞ்சப், கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை நாட்டில் ஒரு கோடியே 79 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டுள்ள உத்தரவில், "ஏப்ரல் 10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். பெங்களூரு, மைசூரு, கல்பர்கி, தும்கூர், உடுப்பி, பிடார், மணிபால் மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்." என்று முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

night time lockdown in bangalore


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->