இந்தியாவுக்கு அடுத்த வெற்றி..பிரளய் ரக ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியது! - Seithipunal
Seithipunal


பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா அடுத்த சாதனை படைத்துள்ளது.பிரளய் ரக ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியது.

டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு  இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளை பரிசோதனை செய்யும் பணிகளையும்  அவ்வப்போது செய்துவருகின்றனர்.அந்தவகையில் சமீபகாலமாக ஏவுகணைககளை பரிசோதனை செய்யும் பணியை நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ('PRALAY') ஏவுகணை சோதித்து பார்க்கபட்டது.அப்போது பிரளய் ரக ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியது.

இந்த பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது ஆகும் . இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.பிரளய் ஏவுகணை என்பது போர்க்கள பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next win for India The Pralai missile hit the target accurately


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->