அடுத்த கட்ட நடவடிக்கைகள்...! ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை...!
Next steps Rajnath Singh consults with three service chiefs
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையை இந்தியா நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் அத்துமீறி கடுமையான தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இதனையடுத்து உலக நாடுகள் சண்டையை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன.
அவ்வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து நடத்திய தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில், இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ''ராஜ்நாத் சிங்'' இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளரும் பங்கேற்றனர்.
இதில் பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமை குறித்து ''ராஜ்நாத் சிங் ஆலோசனை'' நடத்தினார்.இதைப்பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Next steps Rajnath Singh consults with three service chiefs