உடலுறவிற்கு மறுப்பு தெரிவித்த கணவன்..8 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்த உண்மை..அதிர்ச்சியில் மனைவி..!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர ஒரு பெண். இந்த பெண்ணின் முதல் கணவர் கடந்த 2011-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த பெண், இரண்டாவது திருமணத்திற்காக திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடினார். அதில் விராஜ் வர்தன் என்பவரை சந்தித்தார். 

கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். ஆனால், அங்கு விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்கவில்லை. இதேபோன்று பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். 

அந்த பெண் அவரை வற்புறுத்தியதில், வர்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்ததாகவும், அங்கு அவருக்கு விபத்து எற்பட்டதாகவும்,ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு பின் உடலுறவில் ஈடுபடமுடியும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்தார். கடந்த ஜனவரி 2020 இல், அவர் தனது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகத் தெரிவித்து கொல்கத்தா சென்றார். 

ஆனால், விராஜ் வர்தன் முறைப்படி ஒரு பெண். மேலும், அவர் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்காகவும், பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்வதற்காகவும் கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் இதை அறிந்த அந்த பெண் கோத்ரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரில், "தனது கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதாகவும் இதைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகவும்" தெரிவித்தார்.

இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து குற்றவாளியான வர்தன் வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக கோத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near gujarat wife complaint to police in husband


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->