பீகார் : லாரி - ஆட்டோ மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள கதிகார் பகுதியில் லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்து கோதா காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை கெரியா கிராமத்திலிருந்து கதிகார் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சிக்கு செல்லும் ரெயிலை பிடிப்பதற்காக கதிகாருக்கு ஆட்டோ ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் நிலையத்திற்கு சென்ற ஆட்டோ மெது மோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், இதில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே ஓடிவந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த அனைவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar seven peoples died for lorry and auto accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->