சிகிச்சையில் இருந்த மணமகள்.! மருத்துவமனையிலேயே தாலிகட்டிய நெகிழ்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள லம்பாடி பள்ளியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் பூபால பள்ளி அடுத்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

அதன் படி, திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. உறவினர் அனைவரும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் மணமகள் சைலஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகளின் பெற்றோர் சைலஜாவை உடனடியாக மீட்டு மாஞ்சார்யாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். சைலஜாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது குறித்து மணமகனின் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் என்று பலர் மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர். அதன் பின்னர், சைலஜாவுக்கு நேற்று முன்தினம் மாலை அவசர அவசரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதற்கிடையே குறித்த நேரத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென்று பெற்றோர்கள் முடிவு செய்தனர். இது தொடர்பாக மருத்துவர்களிடம் தெரிவித்து, மருத்துவமனையில் திருமணத்தை நடத்துவதற்கு முடிவு செய்தனர்.

இதையடுத்து மிக எளிமையான முறையில் மனைகள் கட்டிலில் படுத்திருந்த படியே மணமகன் தாலி கட்டினார். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் என்று அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near andira woman undergoing treatment got married


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->