மோடி தலைமையில் இன்று காவல்துறையினர் மாநாடு...!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று (ஜன.20) தொடங்கிய அகில இந்திய காவல் துறை தலைவர்கள் மாநாடு நாளை (ஜன.22) வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் நேரடியாக மற்றும் காணொளி வாயிலாக இந்தியா முழுவதும் உள்ள காவல்துறை தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்க உள்ளனர். மற்றவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து காணொளி வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

மோடி தலைமையில் நடைபெறும் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் இணையதள குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பில் உள்ள சவால்கள், திறன் மேம்பாடு, சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National level Police heads conference chaired by Modi


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?



Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?




Seithipunal