#Chandrayaan3 || இன்றைய விடியல் உற்சாகம் அளிக்கிறது.!! இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்திய பிரதமர் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன்-3 திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் சந்திராயன்-3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேரடியாக பெங்களூருக்கு வருகை புரிந்தார்.

இது தொடர்பாக "பெங்களூருவில் தரையிறங்கிவிட்டேன். விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன்படி பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை 7:00 மணிக்கு இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான்-3 விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி "இன்றைய விடியலை பெங்களூரு நகரில் இத்தனை உற்சாகமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களையும், வெற்றிபெற்ற விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை. அதனால் தான் நாடு திரும்பிய உடனே பெங்களுரூ வந்திருக்கிறேன். விஞ்ஞானிகளை சந்திக்க வருவதால் முதலமைச்சர், துணை முதலமைச்சரை வரவேண்டாம் என கூறிவிட்டேன். முறைப்படி நான் பெங்களூரு வரும்போது அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi met ISRO scientists directly in Bengaluru and congratulate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->