மும்பை விளம்பர பலகை விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாலை வீசிய புழுதி புயலின் போது ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கர்கோபார் பகுதியில் புழுதிப் புயலின் போது நேற்று 100 அடி உயர பிரம்மாண்ட விளம்பரப் பலகை சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வழி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

படுகாயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புழுதிப் புயலின் திராட்சை இரும்பு விளம்பர பலகை விழுந்ததில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் ,விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai billboard accident death toll rises to 14


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->