உலகின் டாப் 10 பட்டியலில் 03-வது முறையாக இடம் பிடித்துள்ள மும்பை விமான நிலையம்: விபரங்கள் உள்ளே..!
Mumbai Airport has been ranked in the world's top 10 for the 3rd time
உலகின் டாப் 10 விமான நிலையங்களின் பட்டியலில் தொடர்ந்து 03-வது தடவையாக மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் இடம் பிடித்துள்ளது. குறித்த தரவரிசை, டிராவல் அண்ட் லெஷ்யூர் நடத்திய உலகளாவிய பயணிகள் கருத்து சேகரிப்பின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விமான நிலைய கட்டுமானத்தின் வடிவமைப்பு, மறக்க முடியாத உணவு மற்றும் சிறப்பான பயண அனுபவங்களின் அடிப்படையில் பயணிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். 84.23 புள்ளிகளுடன், இந்த ஆண்டும் இந்த பட்டியலில் தொடர்ந்து 03-வது ஆண்டாக இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையமாக மும்பை சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது.
-9u857.png)
இந்த தரவரிசை பட்டியலில் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டும் தரவரிசையில் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
பயணிகளுக்கான சிறப்பான வசதிகள் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவத்தை தரும் விமான நிலையங்கள் பற்றிய டிராவல் அண்ட் லெஷ்யூர் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையம், டோக்கியோவின் ஹனிடா விமான நிலையம் மற்றும் தென் கொரியாவில் உள்ள இன்ச்சோன் சர்வதேச விமான நிலையம் ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் சிறந்த விமான நிலையங்கள் 'டாப் 10' பட்டியல் விபரம்:-
01.இஸ்தான்புல், துருக்கி
02.சாங்கி, சிங்கப்பூர்
03.தோகா, கத்தார்
04.அபுதாபி, யுஏஇ,
05.துபாய், யுஏஇ,
06.ஹாங்காங்
07.ஹெல்சிங்கி, பின்லாந்து
08.டோக்கியோ, ஜப்பான்
09.மும்பை, இந்தியா
10.இன்ச்சோன், தென்கொரியா
English Summary
Mumbai Airport has been ranked in the world's top 10 for the 3rd time