ம.பியில் சோகம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!
MP girl fell into borehole died
மத்திய பிரதேசம், ராஜ்கார்த் மாவட்டத்தில் 4 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
நேற்று மாலை மஹி எனப்படும் சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
MP girl fell into borehole died