ஏமிரேட்ஸில் தாய், குழந்தை மரணம்: கணவர், குடும்பத்தினர் மீது புகார்!
Mother and child die in Emirates Complaint against husband and family
கேரளாவைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) மற்றும் அவர் ஒரு வயதான மகள், ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் கடந்த ஜூலை 8ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டத் தகவலின்படி, விபன்சிகா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், மகள் சுவாசம் தடைபட்டு உயிரிழந்தது, தலையணையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தாயின் தற்கொலையுக்குப் முன்னதாக நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது அந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் , மன அழுத்தம், துன்புறுத்தல், வரதட்சணை சிக்கல்கள் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
விபன்சிகாவின் தாயார் சியாமளா அளித்த புகாரின்படி,கணவர் நிதீஷ் வலியவீட்டில்,அவருடைய தந்தை,மற்றும் சகோதரி நீத்து பெனி,வரதட்சணை கேட்டு, தொடர்ந்து உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்தியுள்ளனர்.அவரது அழகை பொறுக்க முடியாமல் முடியை வெட்டி, மொட்டை அடித்ததாகவும்,
பல பெண்களுடன் நிதீஷுக்கு இருந்த தொடர்புக்கு எதிராக பேசியதற்காக மகளைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
திருமணப் பிணை முறிந்த நிலையில், நிதீஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப, விபன்சிகா கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். தொடர்ந்த துன்புறுத்தலால் விபரீத முடிவுக்கு சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதீஷ், நீத்து பெனி மற்றும் அவரது தந்தை மீது தற்கொலைக்கு தூண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு உயிர்களின் சாவும், குடும்ப துன்புறுத்தலின் வலி மிகுந்த விளைவாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களிலும், பெண்கள் அமைப்புகளிலும் மிகுந்த கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
English Summary
Mother and child die in Emirates Complaint against husband and family