'இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'; புடினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி..!
Modi wishes Russian President Putin on his birthday
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு 73-வது பிறந்தநாள் இன்று. பிராமரின் வாழ்த்து செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன், புடினின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புடினை அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தனது இந்திய வருகையை கடந்த வாரம் உறுதி செய்துள்ளார். அப்போது, அன்பான நண்பர் பிரதமர் மோடி, புத்திசாலியான நபர் என்றும் பாராட்டி இருந்தார். இதனையடுத்து, தற்போது தொலைபேசி அழைப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போது புடினை 'இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளுக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Modi wishes Russian President Putin on his birthday