காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல்.. உத்வேக பேச்சு.. மோடி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், இராணுவ தலைமை தளபதி எம்.எஸ்.நரவானே ஆகியோர் லடாக்கில் உள்ள நிம்மு பகுதிக்கு இன்று சென்றனர். அங்கு எல்லை விவாகரம் தொடர்பாகவும், பாதுகாப்பு விபரம் தொடர்பாகவும் கலந்தாலோசித்தனர். 

இராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இராணுவ வீரர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் பேசினார். இதன்பின்னர், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களை சந்திக்க சென்றார். 

முதலில் அனைவரின் நலன் குறித்து விசாரித்து ஆறுதலும், புத்துணர்ச்சியும் கூறிய மோடி, நீங்கள் துணிச்சலானவர்கள் என்பதை உலகிற்கே உணர்த்தியுள்ளீர்கள். உங்களின் துணிச்சல், நீங்கள் சிந்திய இரத்தம் இளைஞர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தலைமுறை, தலைமுறையாக ஊக்குவிக்கும். 

உங்களின் தைரியம் மற்றும் வீரம் என்பது உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. எதிரிகளுக்கு நீங்கள் அளித்த பதில், அவர்களை எதிர்கொண்ட விதம், இந்த துணிச்சல் இந்தியர்களுக்கு எப்படி? அவர்களின் பயிற்சி என்ன? நாட்டு பற்று தொடர்பாக உலகமே பகுப்பாய்வு செய்து வருகிறது. 

இந்தியா அத்துமீறலுக்கு அடிபணிந்து செல்லாது. எந்த உலக நாடுகளையும் இந்தியா வணங்காது. உங்களை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். 

" மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம், எனநான்கே ஏமம் படைக்கு " என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி, படைவீரனிற்கு தேவையான பண்புகளான வீரம், மானம், முன்னோர் சொற்படி நடத்தல், தலைவனின் நம்பிக்கையை அடைதல் போன்றவற்றை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi visit Galwan Valley Clash Army officers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->