#Breaking: பாண்டிச்சேரி அரசியலில் பெரும் திருப்பம்... என்.ஆர் காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் கூட்டணி?..! - Seithipunal
Seithipunal


என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், பாண்டிச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. பாண்டிச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி, இறுதி நேரத்தில் தனது பலத்தை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கட்சியிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், பாஜக கட்சி சார்பாக கணிசமான தொகுதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், புதுச்சேரி மாநில முதல்வர் பொறுப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தொடர்ந்து இருதரப்பும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 

இதற்குள்ளாக திமுக சார்பில் இருந்து திடீரென என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியை சந்தித்துள்ளனர். 

இதனால் என்.ஆர் காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனை சற்றும் எதிர்பாராத திமுக மற்றும் பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM Chief Officials Meet NR Congress Rangasamy Pondicherry Politics


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->