நிதி முறைகேடு தொடர்பில் டெல்லி மருத்துவ கவுன்சிலை கலைத்து நடவடிக்கை: அமைச்சர் பங்கஜ் சிங் அதிரடி..! - Seithipunal
Seithipunal


நிதி முறைகேடு தொடர்பில் டெல்லி மருத்துவ கவுன்சிலை கலைத்து டெல்லி சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். டெல்லி மருத்துவ கவுன்சிலை கலைக்க அனுமதி கோரி துணை நிலை ஆளுநருக்கு டெல்லி சுகாதார அமைச்சர் பங்கஜ் சிங் முன்மொழிவை அனுப்பியுள்ளார். 

கவுன்சிலில் நடைபெற்ற நிதி முறைகேடுகள், பதிவுகளில் உள்ள வேற்றுமைகள் மற்றும் தவறான நிர்வாக செயல்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவுன்சிலை, அமைச்சர் சிங் கலைத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:- இந்த முன்மொழிவை டெல்லி ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனை ஏற்பதற்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில், விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கவுன்சிலின் பொறுப்புகளை அடுத்த உத்தரவு வரும்வரை சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் கவனித்து கொள்வார் என்றும், அவருடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், தலைவரின் பதவி காலமும் கூட முடிவடையவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Pankaj Singh takes action by dissolving the Delhi Medical Council over financial irregularities


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->