2024 முதல்  பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் படி, இந்த 5ஜி சேவை நாட்டில் சில முக்கிய நகரங்களில் மட்டும் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். 

இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்கப்படும். 

இதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் படி, இந்த ஆண்டு 4ஜி சேவையும், அடுத்த 2024 ஆம் ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister ashwini vaisnav allounce BSNL 5g network start at next year


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->