அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 2 முறை பால் வழங்கப்படும் - மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் அரசுபள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் பால் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் பால் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று ராஜஸ்தான் மாநில அரசு நம்புவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பவன்குமார் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த 2 நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 200 மில்லியும் வழங்கப்படும் என்றும், ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து பால் பவுடர் கொள்முதல் செய்யப்படும் என்றும் கோயல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Milk will be provided twice a week to students of class 1 to 8 in government schools in rajasthan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->