மண மேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மணமகன் மற்றும் உறவினர்களுக்கு காத்திருந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வனிதா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. 

இதையடுத்து மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்திருந்த நிலையில் திடீரென மணமகள் வனிதா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக வனிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கண் முன்னே வனிதா இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

வனிதாவின் பிரேத பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage girl death in up


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal