முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த நபர் பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


மார்க்கண்டேய கட்சு :

முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த மார்க்கண்டேய கட்சு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் பிறந்தார்.

இவர் 1967ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.

இவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புதுதில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார்.

இவர் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011-2014) இருந்தார்.

முக்கிய நிகழ்வுகள் :

1933ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் மறைந்தார்.

1927ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பர்கதுல்லா மறைந்தார்.

 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தி இந்து இதழ் வெளிவரத் தொடங்கியது.

 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

markandey katju birthday 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal