மணிப்பூரில் பதற்றம்: காணாமல் போன மாணவர்கள் பிணமாக? விளக்கம் அளித்த மாநில அரசு! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியான 2 மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மீண்டும் பதற்ற நிலை நிலவி வருகிறது. 

கடந்த ஜூலை மாதம் காணாமல் போன மாணவர்கள் சடலங்களின் புகைப்படம் வெளியான நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மாநில அரசு உறுதியளித்துள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'மாநிலத்தில் இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு 2 மாணவர்களின் சடல புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. 

உயிரிழந்த மாணவர்கள் ஹிஜாம் லின்தோயின்காம்பி (வயது 17), பிஜாம் ஹேம்ஜித் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் இந்த 2 மாணவர்களும் காணாமல் போனார்கள். ஏற்கனவே மணிப்பூர் வன்முறை வழக்கு மக்களின் விருப்பத்தினால் சி.பி.ஐ விசாரணை நடத்துமாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தற்போது வெளியாகி உள்ள புகைப்படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக கடும் தண்டனை வழங்கப்படும். 

மாணவர்களின் புகைப்படத்தை பார்க்கும் போது ஆயுத குழுவின் வனப்பகுதி கூடாரத்தில் இருப்பது போல் தெரிகிறது. மாணவர்களின் படுகொலை பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் மணிப்பூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manipur missing students dead bodies state government explained


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->