காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - பார்ட்டி கொடுத்து கொண்டாடிய கணவர்.! - Seithipunal
Seithipunal


காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - பார்ட்டி கொடுத்து கொண்டாடிய கணவர்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வரகரை பகுதியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் திருமணமாகி தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், மனைவிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை கண்டுக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

இதனால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கணவன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் இந்த மனஉளைச்சலிருந்து விடுபட தனது நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்து, வீட்டில் சுமார் 250 ஆண்களுக்கு பிரியாணி, மதுபானத்துடன் விருந்து கொடுத்து நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man party to friends for wife ran boy friend in kerala


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->