காதலை ஏற்க மறுத்த பெண் - ஆத்திரத்தில் வாலிபர் செய்த பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து சப்னாவை தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

ஆனால் இந்தப் புகார் குறித்து போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த நரேந்திர பஞ்சாபி, அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நரேந்திர பஞ்சாபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man fire to woman body in madhya pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->