தீராத வயிற்று வலியால் துடித்த நபர் - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி.!
man born both male and female reproductive organs in telungana
தீராத வயிற்று வலியால் துடித்த நபர் - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, இதுபோன்ற நபர்களுக்கு ஒன்று கருப்பை இருக்கும். இல்லையென்றால் சிலருக்கு கருவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும்.

சில ஹார்மோன்கள் தாக்கத்தால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கும். அப்போது, பிறப்பிலேயே அவர் ஆணா பெண்ணா என்பதை முடிவு செய்ய முடியும். மரபணுக்களின் பிறழ்வு காரணமாக ஹார்மோன்கள் போதுமான அளவு வெளிப்படுவதில்லை.
இது போன்ற அரிய வகை மனிதர்கள் உலகம் முழுவதிலும் 300 பேரும், இந்தியாவில் 20 பேரும் உள்ளனர். அப்படி உள்ளவர்கள் சாதாரணமாகவே தெரிவார்கள். தாடி மீசை ஆண்களை போலவே இருக்கும். அவர்களுக்கு இருக்கும் ஆண்குறி சாதாரணமானதாகவும் விந்து உற்பத்தி இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்த நபருக்கு லிப்ரோஸ் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஆண் உறுப்பை அகற்றி சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
English Summary
man born both male and female reproductive organs in telungana