ஆன்லைன் சூதாட்டத்தால் திருட்டு தொழில் செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது..!!
man arrested for steal in banglore
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.ஏ. மூர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே மூர்த்தி ஆன்லைன் சூதாட்டத்தில் கவனம் செலுத்தி விளையாட ஆரம்பித்தார். மேலும், அந்த விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், சிவமொக்காவில் உள்ள வீட்டை விற்று மூர்த்தியிடம் கடனை அடைக்கும்படி கொடுத்து விட்டு அவர்களும் பெங்களூருவில் மூர்த்தியுடன் குடியேறினர்.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கிய மூர்த்தி திருட்டில் ஈடுபடத் தொடங்கினார். அதன் படி மூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு டேங்க் பண்ட் ரோடு சுபாஷ் நகரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் தங்கசங்கிலியை பறித்து சென்றிருந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், பெண் பக்தரிடம் சங்கிலி பறித்தது மூர்த்தி தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனில் சிக்கியதால், திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது பல காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான 245 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for steal in banglore