மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு ரசகுல்லா தான்.! பிரச்சாரத்தில் பொளந்துகட்டிய மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பரைபூர் மைதானத்தில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசியாவது, 'மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அதிக இடங்களை பெறும் என மோடி கூறியதற்கு, அவர்கள் தோற்று விட்டனர் என்பதுதான் பொருள். இங்கு பா.ஜனதாவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்' என்று கிண்டலாக பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். ஆனால் மக்கள் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு போடும் ஓட்டுகள் பா.ஜனதாவுக்குதான் பலனளிக்கும்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனித நேயமோ, கலாசாரமோ இருக்காது" என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banarji speech in election campaighn


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->