சட்டசபைக் கூட்டத் தொடருக்கு கைக்குழந்தையுடன் வந்த எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் குளிர்கால கூட்டத்தொடர் மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக  உலகத்தையே குலுக்கி வந்த கொரோனா தொற்றின் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. 

தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த தியோலாலி தொகுதி பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரே, தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்தார். 

கடந்த செப்டம்பர் மாதம் 30 ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏவை அங்கிருந்தவர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர். 

இது குறித்து எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரே தெரிவித்ததாவது, "கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நாக்பூரில் எந்த கூட்டத்தொடரும் நடைபெறவில்லை. தற்போது நான் தாயாகி உள்ளேன். இருப்பினும் எனது தொகுதி வாக்காளர்களுக்கு பதில் பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra state assembly meeting mla Saroj Babulal Ahire participate with her baby


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->