லிப்டில் மாட்டிக்கொண்ட பச்சிளம் சிறுவன் பரிதாபமாக பலி.. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோர்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தாராவி பால்வாடி பகுதியில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு நான்கு வயதுடைய முகமது ஹுஸைபா ஷேக் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் எந்த சமயத்திலும் துருதுவென விளையாடிக்கொன்டு இருப்பதை வழக்கமாக வைத்துள்ளான். 

இந்நிலையில், நேற்று மதிய நேரத்தில் விளையாட கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருக்கும் வீட்டிற்கு அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் வந்துள்ளான். கீழே விளையாடி முடித்துவிட்டு மதியம் சுமார் 12.45 மணியளவில் வீட்டிற்கு செல்ல லிப்டில் சென்றுள்ளான்.

நான்காவது மாடி வந்ததும் சிறுவனின் அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் லிப்டில் இருந்து வெளியே வர, சிறுவன் லிப்டின் உள்புறம் பாதி கால்களை வைத்தவாறு கதவை அடைக்க முயற்சித்துள்ளான். இந்நிலையில், லிப்ட் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னதாகவே, அது மேல் நோக்கி சென்றுள்ளது. 

இதனால் கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுவன், மாடி சுவற்றில் நசுங்கி கீழே விழுந்தான். இந்த பதைபதைப்பு காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர். 

இது குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனை பிணமாக மீட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு லிப்ட் உபயோகம் குறித்தும் சரியான விளக்கம் கொடுத்து பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Dharavi 5 Year child stuck Lift and Crushed Death


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal