இந்தியாவில் முதல் டெஸ்லா கார் விற்பனை! மகாராஷ்டிரா அமைச்சர் பெற்றுக்கொண்டார்!
maharashtra minister Tesla Electric Car
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை முதல்முறையாக மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார். மும்பையில் இன்று திறக்கப்பட்ட டெஸ்லாவின் முதல் ஷோரூமில், அவர் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பெற்றுக்கொண்டார்.
இந்த கார் சுமார் ரூ.75 லட்சம் மதிப்புடையது. இதற்கான முழுத் தொகையையும் நேரடியாக செலுத்தி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதலாவது டெஸ்லா காரை பெற்றுக்கொண்டதில் பெரும் மகிழ்ச்சி மற்றும் பெருமை இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், மின்சார வாகனங்கள் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது பயணத்தை மும்பையில் உள்ள ஷோரூமில் தொடங்கியுள்ளது. இதனுடன், நாட்டில் தனது முதல் மின்சார காரையும் வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் ஒரு மாற்று வாய்ப்பாக வளர்ந்து வரும் நிலையில், டெஸ்லா போன்ற பிரபலமான நிறுவனத்தின் வருகை இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் குறைந்தது 350 முதல் 500 வரை கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
maharashtra minister Tesla Electric Car