இரண்டு முறை பெற்றோருக்கு டிமிக்கி.. எதிர்காலத்தை காப்பாற்றிய 13 வயது சிறுமி..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தின் ஜாபிரபாத் தம்பூரானி கிராமத்தை சார்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை பெற்றோர்கள் 28 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். 

சிறுமி அங்குள்ள பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், பெற்றோர்களின் செயலால் வெறுப்படைந்த சிறுமி, காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கை செய்துள்ளனர். இதன்பின்னர் சில நாட்கள் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் பெற்றோர்கள் இரகசிய திருமணம் ஏற்பாடு செய்ததாக சிறுமி தகவல் தெரிவித்துள்ளார். 

இதனால் சிறுமியின் வீட்டிற்கு நேரடியாக விரைந்த அதிகாரிகள், சிறுமியின் பெற்றோரை கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கி வைத்துக்கொண்டனர். மேலும், காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு சுதாரிப்பாக செயல்பட்ட சிறுமிக்கு பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Jalna District 13 Year girl Child Marriage Stooped 2 Times


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal