மகாராஷ்டிரா பாஜக முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா! மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் குழப்பம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் இதுவரை நடைபெற்ற வந்த பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சி ஆனது நாளையுடன் நிறைவடைகிறது. மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியரியை  சந்தித்து தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 

நாளையுடன் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைவதையடுத்து, முன்கூட்டியே தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு வெற்றி பெற்றாலும், இரண்டு கட்சிகள் இடையே யார் முதலமைச்சர் என்ற போட்டி நிலவுவதால் இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழப்பம் நீடித்து வருகிறது. 

இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாங்களே எதிர்கட்சியாகவே இருக்கிறோம். பாஜக சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும். அவர்களுக்கு தான் ஆட்சி அமைக்க மக்கள் அதிகாரம் கொடுத்து உள்ளார்கள் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

இந்த நிலையில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை அறிவிக்க முடியாத சூழலில் நாளையுடன் ஆயுட்காலம் நிறைவடைய இருப்பதால் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்த பிறகு தெரிவித்துள்ளார்.  

ஒருவேளை யாரும் ஆட்சியமைக்க முன்வராத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra CM fatnawis resigned his post with his ministry


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->