இஸ்லாமிய வாலிபரை காதலித்த மகளை., பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற தந்தை.! 
                                    
                                    
                                   love murder 
 
                                 
                               
                                
                                      
                                            இஸ்லாமிய இளைஞரை காதலித்ததால் இளம்பெண்ணை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரை காதலித்து காரணத்தினால் இளம் பெண்ணின் குடும்பமே சேர்ந்து அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் தங்காட்டா அருகே  ஜிகினா கிராமத்தில் பாதி எரிந்த நிலையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த இளம் பெண் யார் என்பதை போலீஸார் விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில் கோரக்பூரில் உள்ள  பெல்காட் பகுதியை சேர்ந்த ரஞ்சனா என்ற இளம் பெண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இந்த இளம்பெண் எரிக்கப்பட்டு கொலை செய்தது காரணம் என்ன என்பது குறித்து நடத்திய விசாரணையில், ரஞ்சனா இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். இதனால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது.
போலீசார் அந்த பெண்ணின் தந்தை, சகோதரர், மைத்துனர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, கடந்த 3ஆம் தேதி ஜிகினா கிராமத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று வாய் மற்றும் கைகளை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

மேலும், ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுடன் காதல் ஏற்பட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் குடும்பமே சேர்ந்து அவரைக் கொலை செய்ய முடிவு செய்தோம்" என்று அந்தப் பெண்ணின் தந்தையார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.